புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு


இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது.
பெற்றோலிய மற்றும் கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜ கருணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திம வீரக்கொடி,
நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அதிக பதக்கங்களைப் பெற்று சாதனை படைக்க காரணமாக இருந்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதோடு இதற்கு களம் அமைத்துக் கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன் எனத் தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,
தெற்காசிய விளையாட்டு போட்டியில் எமது நாட்டு வீரர்கள் 186 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளனர். இச்சாதனையினை படைத்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளையும் இவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களையும் எமது வீரர்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சின் அதிகாரிகளையும் பாராட்டுகின்றேன்.
விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கை அதிகூடிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்ததையிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.
இவ்விலக்கினை அடைவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை விளையாட்டுத்துறை மூலம் சர்வதேசத்தில் புகழை எட்டியுள்ளதுடன் எமது நாட்டை சர்வதேசத்தை திரும்பிக் பார்க்கவும் வைத்துள்ளது. இதன் மூலம் எமது நாட்டுக்கு எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்

ad

ad