புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2016

ஹரிஸ்ணவியின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி


இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவி ஹரிஸ்ணவியின் கொலையைக்கண்டித்து கண்டனப்பேரணி இடம்பெற்றுள்ளது.
பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதிக்கு மகஜரும் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோருக்கும் மகஜர் அனுப்பப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.
அம் மகஜரின் விபரம் வருமாறு, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிச்சிறுமி (வயது-13) வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கிளிநொச்சி வர்த்தக சமூகத்தினரும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தி மாவட்ட அரச அதிபர் ஊடாக இம்மனுவை சமர்ப்பிக்கிறோம்.
எமது சமூக வாழ்வின் இருப்பிற்கு கீர்த்தி மிக்க கலாச்சார பின்னணியே அடிப்படையானது என்பதுடன் பெண் சமூகத்தினரது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் சர்வதேச தரம் வாய்ந்த சிந்தனைகளை கொண்டு செயற்படுகின்ற அறிவு, அனுபவம் மிக்க சமூகமாக நாம் திகழ்கிறோம் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
யுத்த காலத்தின் போதும் அதன் பின்னரான காட்டாட்சிக் காலத்திலும் கொடூரம் நிறைந்த வன்புணர்வுகளும் படுகொலைகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் தொடர்ந்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது
தங்களின் சங்கைக்குரிய சிந்தனைகள் குறித்து நாம் அறிவோம். விசேடமாக மது பாவனைக்கெதிரான தங்களின் ஆர்வம் எங்களை ஈர்த்துள்ளது.
ஆனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதில் சட்டத்தின் ஆட்சி போதுமானதாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகம் என்றும் நீதியின் பாதையிலுள்ள சில பாதைகள் வழியாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவும் நீதி தாமதம் பெறவும் வழி ஏற்படுகிறது.
இசைப்பிரியா போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் தொடக்கம் வித்தியா ஹரிஸ்ணவி ஈறாக இளைய சகோதரிகள் பலர் துடிக்க பதைக்க வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தங்கள் நெஞ்சை உருக்கவில்லையா? இதுதான் நல்லாட்சியின் குணாம்சமா? தயவுசெய்து இவர்களை தங்களின் பிள்ளைகளாக நினைத்து தங்களின் விசேட உத்தரவுகளின் கீழ் இத்தகைய நடவடிக்கை தொடரா வண்ணம் நல்லாட்சி சிறக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ad

ad