புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2016

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது? கர்நாடக அரசு வக்கீல் கேள்வி- விகடன் ]

1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, கர்நாடகா அரசு தரப்பு தங்களது இறுதி வாதத்தை முன்வைத்தது. வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில், ஜெயலலிதா உள்பட 4 பேரும் சேர்ந்து ரூ.55 கோடிக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர். 1991ல் முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது. முறைகேடாக சேர்ந்த பணம் எல்லாம் பல நிறுவனம் மூலம் வந்ததாக காட்டியுள்ளனர். ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்ததாக கூறுகின்றனர்.
நிறுவனங்கள் மூலம் வந்த வருமானம் என்பது உண்மைக்கு மாறானது. பல கோடி ரூபாய் சொத்தும் முறைகேடாக சேர்த்ததற்கு ஆவண ஆதாரம் உள்ளது. அரசு ஊழியர் என்ற முறையில் ஜெயலலிதா சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா உள்பட 4 பேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டனர். ஆதாரம் இருந்தும் கர்நாடக உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. குற்றச்சாட்டுகளை கர்நாடக உயர் நீதிமன்றம் சாதாரணமாகக் கருதி விட்டது" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ad

ad