புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2016

டி20 ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்!


ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவும்
வங்கதேசமும் மோதின. மழையால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் இந்தியா டாஸ் வென்று வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.


முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120  ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சோஹித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து இறங்கிய கோலி தவானுடன் பொறுப்புடன் விளையாடினார். இந்நிலையில் மெதுவாக விளையாடி வந்த தவான் அதிரடியாக விளையாட ஆரம்பித்து அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த தவன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.


இதனை தொடர்ந்து கேப்டன் டோனி களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி வழி வகுத்தார்.  விராட் கோலி 41 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 ஆசிய கோப்பை சாம்பியம் பட்டத்தையும் கைப்பற்றியது.

ad

ad