புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

டி20 உலக கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கிண்ணம் டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலககிண்ணம் டி20 போட்டி தொடரின் பிரதானச் சுற்று இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
இதையடுத்து குப்தில், கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அஸ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்து தனது ஓட்ட எண்ணிக்கையை தொடங்கிய குப்தில் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரை குப்தில் சிக்சருடன் தொடங்கினார். நெஹ்ரா வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்தில் முன்றோ ஆட்டமிழந்தார்.
பின்னர் 3 வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சனுடன் கோரி ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிலைத்து நின்று விளையாடியது.
இதன் காரணமாக 6 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் 7வது ஓவரை வீசிய ரெய்னா வில்லியம்சனை சிறப்பாக ஸ்டம்பிங் செய்து வெளியேறினார்.
அவர் 16 பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பின்ன நியூசிலாந்து அணியினர் ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறினர்.
டெய்லர் 10 ஓட்டங்களிலும் கோரி ஆண்டர்சன் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் அட்டம் இழந்தனர்.
சான்ட்னெர் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதையடுத்து 127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா மற்றும் தவான் துவக்க வீரர்களாக துடுப்பெடுத்தாடினர்.
இந்நிலையில் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராத் கோஹ்லி களமிறங்கினார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா சுரேஷ் ரெய்னா யுவராஜ் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அப்போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பின்னர் அணித்தலைவர் டோனி மற்றும் கோஹ்லி இணை சிறிது நேரம் தாக்கு பிடித்தாடியது.
இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 39 ஆக இருந்தபோது கோஹ்லி 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர்வந்தவர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அதிகப்பட்சமாக டோனி 30 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

ad

ad