புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 மார்., 2016

அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல; மக்கள்நலக் கூட்டணியே! உ.வாசுகி பேட்ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் அதிமுகவும் திமுகவும் இருக்கிறது. எனவே, எந்த வகையிலும் அதிமுகவிற்கு மாற்றாக திமுகவை ஏற்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி. புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது,

’’கடந்த மூன்று ஆண்டுகளில் 81 சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளது. 81-வது கொலைகயாக உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நடுரோட்டில் தலித் இளைஞர் சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வங்கியில் கடன்வாங்கி குடும்பத்தினர் அவரை பொறியியல் படிக்க வைத்துள்ளனர். தன் மகன் தனது குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் இருந்த அந்த குடும்பம் தற்பொழுது நிர்க்கதியில் நிற்கிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வங்கிகடனை தமிழக அரசே ஏற்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். 

சங்கரின் மனைவி கவுசல்யா தனது எதிர்காலம் தெரியாமல் நிர்க்கதியாக இருக்கிறர். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது வேறு முக்கியமான விசயம் இருக்கிறது அதைப் போடுங்கள் என அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இதன் மூலம் சாதியத்தின் மீதான அவர் மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிப்பதாக உள்ளது. இதுபோன்ற கவுரவக்கொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டுமென்று எங்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன் சட்டமன்றத்தில் தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். எந்தக் காரணமும் சொல்லாமல் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது.

இளவரசன், கோகுல்ராஜ், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா போன்ற விவகாரங்களில் காவல்துறையும், தமிழக அரசும் கையாளும் விதம் சாதிய சக்திகளுக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. 

தேர்தல் கமிஷனால் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. ஆளுங்கட்சி சின்னமான இரட்டை இலைச்சின்னம், முதல்வர் படம், அம்மா என்கிற பெயர் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். 

மீனவர்கள் பிரச்சினையில் முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. இரு நாட்டு மீனவர்களையும் அழைத்துப் பேசுவதன் மூலமே நிரந்தரத் தீர்வுகாண முடியும். மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ள விஜய் மல்லையா, லலித்மோடி போன்ற போன்றவர்களை வெளிநாட்டுக்கு தப்பவிட்டுள்ளது மத்திய அரசு. விஜய் மல்லையாவை எம்பி ஆக்கிய பிஜேபி, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். 

எது தேச விரோதம்? எது தேச பக்தி? என்பதிலேயே இங்கே குழப்பம் நீடிக்கிறது. மதச்சார்பின்மை குறித்துப் பேசினால் தேச விரோதமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்வேன் என்பதும், தற்கொலைக்குத் தூண்டுவதும் தேச பக்தியாக சித்தரிக்கப்படுகிறது. 

கட்சியின் மேற்குவங்க நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, கடந்த 2011 முதல் இதுவரை 175 சிபிஎம் தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களில் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 1600-க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அலவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன. மனித உரிமை மீரல் நடந்துள்ளது என்று சொன்ன காரணத்திற்காக அம்மாநில மனித உரிமை ஆணையர் மிரட்டப்பட்டார். முறைகேடு நடந்துள்ளதாக கூறியதற்காக எம்பி தேர்தலில் வாக்கு எண்ணும் நேரத்திலேயே அம்மாநில தேர்தல் ஆணையர் மிரட்டப்பட்டு, ராஜனாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர்களே கண்டன ஊர்வலம் நடத்தும் அளவிற்கு அங்கே அராஜகம் அரங்கேற்றப்படுகிறது.

அத்தகைய அராஜக மம்தா ஆட்சியை அகற்றுவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளை தனிமைப்படுத்துவதற்கு இதர ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது அவசியமாகிறது. அங்கே திரிணாமுல் காங்கிரசுக்கு மாற்றாக இடதுசாரிகள் இருக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுகவிற்கு மாற்றாக திமுகவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இரண்டு கட்சியும் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலைச் சந்திக்கும் மக்கள்நலக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறோம்’’ என்றார்.