புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2016

என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது- பழ.கருப்பையா

என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தெரிவித்து
உள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அதிரடி நடவடிக்கையாக பல அமைச்சர்கள் நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும் அ.தி.மு.க.வில் வாடிக்கையான ஒன்றுதான். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்துக் கொள்வார்கள். நான் ஒருவன்தான் ராஜினாமா கடிதம் கொடுத்தவன். கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்கும், சேர்க்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்று சொல்லமாட்டார்கள்.

தற்போது தேர்தல் கமிஷன் நடவடிக்கை என்பது போகிற, வருகிறவர்களின் டவுசர் பையில் பணம் இருந்தால் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க போலீஸ் வண்டியை பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள், அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் ஒழித்துவிடலாம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் ஒருவரை தான் ஒழிப்பார்கள். இன்னொருவரை ஒழிக்க மாட்டார்கள். மாறாக வளர்ப்பார்கள். கருணாநிதியை தோற்கடித்து, ஜெயலலிதாவை வெற்றி பெற செய்வதால் அவர்களுக்கு என்ன பயன் இருக்கிறது. அதனால், என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதா

ad

ad