புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2016

டி20 உலக கிண்ணம்: அரையிறுதியில் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

டி20 உலக கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி  அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
நாக்பூரின் விதர்பா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவின் துவக்க வீரர்களாக ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர்.
மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் விரைவாக வெளியேறினர்.
ஆம்லா 1 ஓட்டத்திலும், டூபிளசிஸ் 9 ஓட்டங்களிலும் ரொஸ்சோ ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் அதிரடி ஆட்டக்காரர் டிவிலியர்ஸ் களமிறங்கினார். சிறிது நேரம் தாக்குபிடித்த அவர் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 46 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் டி காக் நிலைத்து நின்று ஆடி ஓட்டங்களை உயர்த்த முயன்றார்.
எனினும் அவருக்கு ஏற்ற துணை அமையாததால் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டி காக் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டேவிட் வெஸி மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 122 ஓட்டங்களை எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரசெல், கெய்ல் மற்றும் பிராவோ தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக ஜான்ஸன் சார்லஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் களம் புகுந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் வந்த ஃபிளட்செர் 1 சிக்சர் உட்பட 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சார்லஸுடன் சாமுவேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தனர்.
இந்நிலையில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சார்லஸ் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பிராவோ 8 ஓட்டங்களிலும், ரசெல் 4 ஓட்டங்களிலும் சாமி ஓட்டங்கள் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தென்னாப்பிரிக்காவின் பக்கம் வெற்றி வாய்ப்பு திரும்பியது. எனினும் சாமுவேல்ஸ் இறுதி வரை போராடினர்.
19 வது ஓவரில் சாமுவேல்ஸ் 6 பவுண்டரி உட்பட 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசி 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் எடுத்தால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது, கடைசி ஓவரின் 2 வது பந்தில் கர்லொஸ் சிக்சர் அடித்து பதற்றத்தை தணித்தார்.
இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

ad

ad