21 மார்., 2016

.26 கோடி செலவில் புதிய கட்டிடம்: விஷால் பேட்டி - நடிகர் சங்கம் கிடைத்து விட்டது: வடிவேலு பேச்சுதென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், துணைத் தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளராக கார்த்தி ஆகியோர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னை, நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி வளாகத்தில், சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாசர் பேசுகையில், நடிகர் சங்கத்தில் குரு தட்சணை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. சங்கத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளதை கருதி பலர் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் சங்கம் சார்பில் நலித்த நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், 

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர்களுக்காக பல நலத்திட்டங்கள் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டன. புதிய கட்டிடம் கட்ட பொதுக்குழு 100 சதவீத அதிகாரத்தை நிர்வாகக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட நிதி வசூல் செய்யவும் நிர்வாகக் குழுவுக்கு பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது. கட்டிடம் கட்ட திரட்டப்படும் நிதியை கையாளவும் நிர்வாகக் குழுவுக்கு பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது. 

கட்டிடம் கட்ட கிட்டதட்ட 26 கோடி ரூபாய் செலவாகும். அதை எப்படி திரட்டப்போகிறோம். எப்படி கட்டிடத்தை கட்டி முடிக்கப்போகிறோம் என்று விவாதித்தோம். ஏப்ரல் இறுதியில் கட்டிடப் பணியை தொடங்கி, 2018க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐசரி கணேசன், சின்ன திருமணம் மண்டபம் கட்டித் தருவதாக கூறினார். ப்ரிவியூ தியேட்டரை சிவக்குமார் குடும்பத்தினர் கட்டித் தருவதாக தெரிவித்தனர். முதியோர் இல்லத்திற்கு கருணாஸ், எஸ்.எஸ்.ஆர். மகன் ஆகியோர் கூடுவாஞ்சேரி மற்றும் திண்டுக்கல்லில் இடம் தருவதாக தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதியை திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நிச்சயம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள். இவ்வாறு கூறினர். 

முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் வடிவேலு பேசுகையில், காணாமல போன நடிகர் சங்கம் கிடைத்து விட்டது. ரூ.26 கோடி செலவில் புதிய நடிகர் சங்கம் கட்டப்படும் எனக் கூறினார்.