புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2016

நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்- தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமா?

அடுத்த வாரம் இறுதியில் தே.மு.தி.க. நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க இருக்கிறார். அப்போது, தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் செய்வாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்ப
டும் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 57 நாட்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்தும், கூட்டணி அமைத்த கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க.வை பொறுத்தவரையில், இந்த சட்டமன்ற தேர்தலில் அவர்களின் தலைமையை ஏற்கும் கூட்டணி என்ற கதவை பா.ஜ.க.வும், மக்கள் நலக்கூட்டணியும் தவிர்த்துவிட்டதால், தற்போது தே.மு.தி.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதா? அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் அவ்வப்போது கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து சென்றாலும், அவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ன? என்பதை யாராலும் யூகிக்க முடியாத நிலையே தற்போதுவரை இருந்து வருகிறது.

இதுவரை கட்சி அலுவலகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மட்டுமே நடந்து வருகிறது. அந்த பணி முடியும் தருவாயில் இருக்கிறது. சமீபத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகளிடம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மாநில, மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தி.மு.க. கூட்டணியில் சேருவதே நமக்கு இந்த சூழ்நிலையில் ஏற்றதாக இருக்கும் என்று கட்சி தலைவரிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், இதுகுறித்து விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தே.மு.தி.க.வின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன? என்பது குறித்து முடிவு செய்யவும், கூட்டணி குறித்து பேசலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில், அடுத்த வாரம் இறுதியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்க இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.மு.க.வின் அமைதி பின்னணியை வைத்து பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad