புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2016

நளினிக்கு 3 நாள் பரோல் வழங்க தமிழக அரசு எதிர்த்தது ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,  தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினிக்கு ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


இந்த நிலையில், வரும் 9-ம் தேதி நடக்க உள்ள தந்தையின் 16-வது நாள் காரியத்தில் பங்கேற்பதற்காக 3 நாள் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நளினிக்கு மூன்று நாள் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஒருநாள் மட்டும் பரோல் வழங்கி நளினிக்கு அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம்.
எதிர்ப்பு ஏன்?
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. அப்படி இருக்கையில், இன்றைய விசாரணையின்போது நளினிக்கு 3 நாள் பரோல் வழங்க கூட தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஏன்...? அப்படியானால் தமிழக அரசு தரப்பில் 7 பேரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுவது நாடகமா..? என்பதுபோன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகின்றன. 

இதுகுறித்து வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் விசாரித்தபோது, நளினி உள்ளிட்டவர்களுக்கு நன்னடத்தையின் அடிப்படையிலேயே விடுதலை வழங்க சிறைத்துறை அதிகாரி பரிந்துரைத்து அதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தண்டனை கைதி ஒருவர் பரோலில் சென்றால் அது அவருக்கு 'நெகடிவ்' பாய்ண்டாக சிறைக்குறிப்பில் இடம் பெறும் என்றும், இது அவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கு எதிராக அமைந்து விடும் என்றும் சொல்கிறார்கள். அதாவது, பரோல் உள்ளிட்ட சலுகைகளை அனுபவிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட கைதி இயல்பான வெளியுலக வாழ்க்கையை அனுபவிப்பதாக கருதப்பட்டு விடுதலைக்கு எதிராக அமைந்து விடும் என்பதாலேயே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர நளினி பரோலில் இருக்கும்பொழுது அவருக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அதற்கான முழு பழியும் தமிழக அரசு மீதே விழும். மேலும் நளினிக்கு எதிரானவர்களால் ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதாலேயே பரோலுக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ad

ad