புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2016

தமிழக பாரதிய ஜனதாவுக்கு ரோஷம் வந்துடுச்சு!

தே.மு.தி.க , பா.ம.கவுடன்  இனி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்றும், அந்த கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷாவிடமே முடிவை விட்டு விடுவது எனவும் பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது. மேலும் மாநிலத் தலைமைக்குத் தெரியாமல் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறித்து மத்திய தலைமையிடம்  புகார் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக  சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது.  இதற்காக தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து பல்வேறு முறை தே.மு.தி.கத் தலைவர் விஜயகாந்த், பா.ம.கத் தலைவர்கள் அன்புமணி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் எந்த பலனும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. 

கடந்த வார தொடக்கத்தில்  தமிழகம் வந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். ஆனால் பிரகாஷ் ஜவடேகரின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவரும் ஏமாற்றத்துடனேயே டெல்லி திரும்பினார்.
அடுத்து மாநிலத் தலைமைக்குத் தெரியாமலேயே மார்ச் 3-ம் தேதியும் சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோரை சந்திக்க முயற்சி மேற்கொண்டும்,  அவர்களை சந்திக்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஏமாற்றமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது.

சென்னையில் இது தொடர்பாக நடந்த பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டத்தில்,  முக்கிய விவாதமாக  இவ்விவகாரம் முன் வைக்கப்பட்டது.  கூட்டத்தில்  தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாநிலத் தலைமைக்கு தெரியாமல் ஜவடேகர் சென்னைக்கு வந்ததும், யாரையும் சந்திக்காமல் தோல்வியுடன் திரும்பியதும் பாஜகவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக அனைவரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. 

இந்த கூட்டத்தில்,  ‘‘இனி தேமுதிக, பாமகவை பா.ஜ.க தரப்பில் இருந்து  தேடிச் சென்று பேசக் கூடாது.  அவர்கள் விரும்பினால் டெல்லி சென்று  அமித்ஷாவுடன் பேச வேண்டும்" என மையக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதனை தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் தெரிவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

ad

ad