புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2016

ஐ.ஜே.கே. நேர்காணல் தொடக்கம்:தனித்து விடப்படும் பாஜக

பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் நேர்காணல்
சென்னையில் நேற்று(திங்கள்)  தொடங்கியது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்பட்ட நிலையில்,ஐ.ஜே.கே. அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில் நேர்காணல் கூட்டம் தொடங்கியது.இதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட  விருப்ப மனு அளித்து இருந்த அரியலூர்,பெரம்பலூர்,தஞ்சாவூர்,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐ.ஜே.கே. பிரமுகர்கள் 150 பேர் கலந்துகொண்டனர்.அவர்களிடம்,கல்வித் தகுதி,மக்கள் செல்வாக்கு,தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் திறன் ஆகியவை குறித்து பாரிவேந்தர் கேட்டறிந்தார்.நேர்காணலின் போது,ஐ.ஜே.கே. தலைவர் கோவைத்தம்பி,செயல் தலைவர் ரவி பச்சமுத்து,பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போட்டியிட விரும்புவர்களிடமிருந்து கடந்த வாரம் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.  ஐ.ஜே.கே.சார்பில் தமிழகத்தின் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட  3,672 பேர் விருப்ப மனுக்கள் அளித்து இருந்தனர். இதில் பெண்களுக்கு என்று 50% பேர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பாரிவேந்தர் முன்பே அறிவித்து இருந்தார்.அதன்படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. 

மேற்கண்ட 4 மாவட்டங்கள் தவிர  மீதமுள்ள மாவட்டங்களுக்கு இந்த வாரம் முழுவதும் நேர்காணல் நடக்கும் என்றும்,அதன் பிறகே இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக,தமிழகத்தில் கூட்டணி அமைக்கவே பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து ஐ.ஜே.கே.வும் விலகி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

ad

ad