புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2016

அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம்பெறலாம்: உத்தரவை மாற்றியது உ. நீ.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களை
வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும், இதற்காக சில விதிமுறைகளையும் அறிவித்து கடந்த மே 13ம்  தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம்பெறவும் அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் பி.சி.கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "அரசு விளம்பரங்களில் ஆளுநர் மற்றும் முதல்வர் படங்கள் இடம்பெற தடை விதிப்பது தவறானது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெரிந்துகொள்வது மக்களின் அடிப்படை உரிமை; இந்த விஷயத்தில் தேவையற்ற தடைகளை விதிக்கக்கூடாது" என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்,  இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களும் இடம் பெறலாம் என்று கூறியது.

ஏற்கனவே, அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை ஆகியோரின் படங்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்போது, தன்னுடைய முந்தைய உத்தரவை மாற்றி அமைத்துள்ளது.

ad

ad