புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2016

கஜானாவைத் தேடும் கார்டன்...: வீட்டுச் சிறையில் மூன்று அமைச்சர்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் கார்டனின் குட்புக்கில்
இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் தேடித் தேடி வேட்டையாடி வருகிறார்கள். உச்சக்கட்டமாக, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் உறவினர்களுடன் கோவைக்கு வந்திருந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் வருகைக்கான காரணம் தெரியாமல் கட்சிக்காரர்கள் தவித்தனர். ஆனால், ஓ.பி.எஸ் தரப்போ, " அவரோட அம்மாவுக்கு வயிற்றில் பிரச்னை. அதனால் கோவையில் உள்ள ஜெம் ஆஸ்பிட்டலுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக கூட்டி வந்தார். இரண்டு நாள் சிகிச்சை முடிந்து, நேற்று இரவு 11.50 ஃபிளைட்டில் கிளம்பிவிட்டார். வேறு எதுவும் நம்பத் தேவையில்லை" என்றனர். ஆனால், கார்டன் நிர்வாகிகள் சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கிறது. " இன்றைக்கு கார்டனின் தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருப்பது ஓ.பி.எஸ் மட்டுமல்ல. அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்களும்தான். கோவையில் கடந்த மூன்று நாட்களாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, ஓ.பி.எஸ் வாங்கிக் குவித்த சொத்துக்களை சல்லடை போட்டுத் தேடி வந்தனர்.

இதில், தேயிலை எஸ்டேட்டுகள், விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் என பலவும் அடக்கம். ஓ.பி.எஸ்ஸுக்கு சொத்துக்களைப் பேசி முடித்தது அமைச்சர் வேலுமணிதான். கடந்த தேர்தலில் சீட் கிடைத்து அமைச்சர் பதவி ஆவது வரையில் வேலுமணிக்கு ஆல் இன் ஆல் ஓ.பி.எஸ்தான். கார்டனின் கோபப் பார்வையில் ஓ.பி.எஸ் விழுந்ததுமே, நேராக அம்மா காலில் விழுந்த அமைச்சர் வேலுமணி, " அவர் சொத்து வாங்கியிருப்பது அனைத்தும் தெரியும். எல்லாவற்றையும் நான் காட்டுகிறேன். ஆனால், எனக்கும் அதற்கும் எந்த சம்பந்ததும் இல்லை. என்னுடைய தொகுதி என்பதால் அவர் அடிக்கடி வருவதும் சொத்து வாங்குவதும் தெரியும்" என தடாலடியாக மாறிவிட்டார். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸின் கஜானாவைத் தேடி தீவிர தேடுதலை நடத்தி வந்தது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தலைமையிலான டீம். நேற்று மதியம் சொத்துக்களுக்கான ஆவணங்கள், அதற்கான புகைப்படங்கள் என அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய்விட்டது. கோவையில் நடந்த விசாரணையில் ஓ.பி.எஸ்ஸும் இருந்திருக்கிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் சில சொத்துக்கள் விபரத்தை வாங்கியுள்ளது மூவர் டீம். 

கொங்கு மண்டல வேட்டையை முடித்துக் கொண்டு கார்டன் திரும்பிய மூவர் டீம், நடந்த விவரங்களை கார்டன் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதையடுத்து, அமைச்சர் வேலுமணி கார்டனுக்குள் அழைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கோவையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் வேலுமணியுடையதா? ஓ.பியுடையதா? என தனியாக பட்டிமன்றமே நடந்து வருகிறது. தற்போது ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் உள்ளிட்ட மூவரையும் உயர் பாதுகாப்பு வளையத்தில் வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது கார்டன் வட்டாரம். வெளியுலக தொடர்பில் இருந்து மூவரும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். சொத்து விவரங்கள், நடத்தப்பட்ட பேரங்கள் குறித்து முழு விபரம் வருகின்றபோது, மேலும் சில அமைச்சர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படலாம் என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

கார்டனில் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? என்பதை யூகிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் அமைச்சர்கள். 

ad

ad