புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2016

மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்!

!மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் அடங்கிய பெருமளவிலான உறுப்பினர்கள் மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் ஏற்பாடு செய்யவுள்ள மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், இதனைத் தடுத்துக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான பேச்சுக்கள் - முயற்சிகளில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சு.க. மத்திய செயற்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முறை நடைபெற்ற மே தின நிகழ்வுகளின்போதும் மஹிந்த ஆதரவு அணியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன தனித்தனியே பேரணி மற்றும் கூட்டங்களை கொழும்பில் நடத்தியிருந்தனர். இதனால், இரண்டு தரப்பினரதும் நிகழ்வுகள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்நிலையில், மீண்டும் இம்முறையும் மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் கொழும்பில் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச உள்ளிட்ட சு.கவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்காக சு.கவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், பிளவைத் தடுப்பதற்கான முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கட்சியைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் பஷில் ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கே உள்ளது. ஆனால், பொது எதிரணியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே,குமார் வெல்கம, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பெருமளவிலாளவர்களுக்கு கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான எவ்வித நோக்கமும் இல்லை. இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சிக்கு எதிராக பொது எதிரணியினர் மே தின ஊர்வளம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளனர் என்று அறிகின்றோம். இதில் சு.கவினர் எவரும் பங்கேற்கமாட்டார்கள். அதற்கான சமரசப் பேச்சுக்கள் தற்போது நிறைவுக்கு வருகின்றன என்றார்.

ad

ad