புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2016

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் நீதிகேட்டு 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்; ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை அக்கரைப்பற்றில் நடத்தினர்.

அம்பாறை மாவட்ட காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவி இ.செல்வராணி தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து, மாவட்டத்தை சேர்ந்த காணாமல்போனோரின் உறவுகள் காலை 9.30 மணிக்கு அக்கரைப்பற்று வீதி, அம்பாறை வீதி, பொத்துவில் வீதி ஆகிய இடங்களில் இருந்து பேரணியை ஆரம்பித்து, அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஒன்றிணைந்து கல்முனை பிரதான வீதிவழியாக அதாவுல்லா அரங்கு வரை சென்று அங்கு கூட்டம் நடைபெற்றது. 

                                                     

இதில் கலந்துகொண்டர்களின் தலைகளில் 'எமது உறவுகள் எங்கே' எனும் வாசகம் பொறிக்கப்பட்ட கறுப்புப் பட்டி அணிந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்கள் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று அதாவுல்லா அரங்கை அடைந்து அங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, மனோகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ad

ad