புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2016

ஜெயலலிதாவின் நம்பிக்கை கைகொடுக்குமா?

வருகிற  தேர்தலில் ஆறு முனை போட்டி  ஒன்று  நீண்ட காலத்தின் பின்னர்  உருவாக்கி உள்ளது   அ தி மு க்  , தி மு கா காங்கிரஸ் கூட்டணி , தே தி மு க
/ம ந கூட்டணி ,பாட்டாளி மக்கள் கட்சி , பாரதீய ஜனதா, நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள்.இவற்றில் அ தி மு க,தி மு கா அணிகளை     மற்றைய அணிகள்  எதிர்ப்பது  விறுவிறுப்பாக இருக்கும் .அ தி மு கா வுக்கு எதிர்கட்சிகள்  ஐந்தாக  சிதறி கிடப்பது  மாபெரும் பலமாக கருதப்படுகிறது .தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆகும்.
1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
206 தொகுதிகளில், 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது. 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 46 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் வந்த திமுக அதிமுக கட்சிகள், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் ஆட்சியை பிடித்தன.
இந்நிலையில், காமராஜரின் சாதனையை சமன் செய்யும் விதமாக, வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே அதிமுக போட்டியிட உள்ளது.
ஏனெனில் கடந்த லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் மக்கள் மத்தியில் அதிமுக கட்சியின் பலம் அதிகமாக உள்ளது என ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் இந்த அதிரடி முடிவுகள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad