கட்சியிலேயே இல்லாதவருக்கு 'சீட்' கொடுத்து அதிர்ச்சியை அளித்துள்ளார் ஜெயலலிதா.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் தோழமை கட்சிகளான ஆறு கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்திய குடியரசு கட்சியில் இருந்து, கடந்த மாதமே செ. கு தமிழரசன் நீக்கபட்டுவிட்டார். அதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் சென்னையில் கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிட்டார். ஆனால், அவருக்கு இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் என்ற அறிவிப்புடன், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் ஜெயலலிதா.
வாய்ப்பளிப்பது என்பது அவர் கட்சி சம்பந்தப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், அறிவிப்பில் இந்திய குடியரசு கட்சி தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தெரிந்தே இது போல் வெளியிட்டாரா அல்லது தமிழரசன் வேறு என்ன காரணம் சொல்லி இந்த வாய்ப்பு பெற்றார் என்பது தெரியவில்லை