புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

+2 தேர்வு முடிவு வெளியீடு -இரண்டு பேர் முதலிடம்

+2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இரண்டு பேர் முதலிடம் 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் 199, ஆங்கிலம் 197, இயற்பியல் 199, கணிதம், உயிரியல், வேதியியல் 200

இதேபோல ஊத்தங்கரையைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவனும் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடம் 

திருவள்ளுர் மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் திருவள்ளுர் ஸ்ரீநிகேதன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆவார். 

மூன்றாம் இடம் 

4 மாணவர்கள் 1,193 மதிப்பெண்களை பிடித்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.


கணிதம் பாடத்தில் 3,361 பேர்
வேதியியல் பாடத்தில் 1,703 பேர் 
இயற்பியல் பாடத்தில் 5 பேர் 
விலங்கியல் பாடத்தில் 10 பேர் 
உயிரியல் பாடத்தில் 775 பேர் 
தாவரவியல் பாடத்தில் 20 பேர் 
வணிக கணிதம் பாடத்தில் 1,072 பேர்  200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.


+2 தேர்வில் தமிழ் அல்லாத மொழியை முதல் பாடமாக எடுத்தோரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நல்மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சத்ரிய கவின் என்ற மாணவர் 1195 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஸ்ருதி 1,194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மாணவி சம்ரிதா 1,193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளார். 

மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்

1. கன்னியாகுமரி -- 95.7
2. திருநெல்வேலி - 94.76
3. தூத்துக்குடி -- 95.47
4. ராமநாதபுரம் - 95.04
5. சிவகங்கை - 95.07
6. விருதுநகர் - 95.73
7. தேனி - 95.11
8. மதுரை -93.19
9. திண்டுக்கல் - 90.48
10. ஊட்டி - 91.29
11. திருப்பூர் - 95.2
12. கோவை - 94.15
13. ஈரோடு - 96.92
14. சேலம் - 90.9
15. நாமக்கல் - 94.37
16. கிருஷ்ணகிரி - 85.99
17. தர்மபுரி -90.42
18. புதுக்கோட்டை - 93.01
19. கரூர் - 93.52
2-0. அரியலூர் - 90.53
21. பெரம்பலூர் - 96.73
22. திருச்சி - 94.65
23. நாகப்பட்டினம் - 86.8
24. திருவாரூர் - 84.18
25. தஞ்சாவூர் - 90.14
26. பாண்டிசேரி - 87.74
27. விழுப்புரம் - 89.47
28. கூடலூர் - 84.63
29. திருவண்ணாமலை - 90.67
30. வேலூர் - 83.13
31. காஞ்சீபுரம் - 90.72
32. திருவள்ளூர் - 87.44
33. சென்னை - 91.81

ad

ad