புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார்

மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார் தேர்தலுக்கு பின் உடையும் நிலையில் அதிமுக
( இணையத்தில் இப்பொழுது வைரலாக பரவும் செய்தி )
கடந்த ஒரு மாதத்திற்கு முன் OPS, நத்தம், செந்தில் பாலாஜி போன்றோரை கட்டம் கட்ட நினைத்து வீட்டு காவலில் வைத்ததை தமிழகம் அறியும் ஆனால் அறியாதது மேற் சொன்ன மூவரும் அம்மையாரை மிரட்டியதும் அம்மையார் அதற்க்கு அடிபனிந்ததும்
அதிமுகவில் கோலோச்சிய ஐவரணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய ஐவரும் கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்டில் இருந்தனர் . அதிமுக மகளிரணி மாநாடு தொடங்கி நேர்காணல் வரைக்கும் எதற்குமே 'ஓபிஎஸ் அன் கோ' தள்ளியே வைத்திருநதார் ஜெயலலிதா . வேட்பாளர் லிஸ்டிலாவது இவர்கள் ஐவரின் பெயர் இடம்பெறுமா என்கிற நிலமையில் இன்றோ வேட்பாளர் பட்டியலில் இவர்கள் ஐவரும் இதன் பின்னணியை உற்று நோக்கினால் உண்மை புரியும்
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் அல்ல  கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் செயல் பட முடியாமல் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார்  ஆனால் இன்றோ அவர் அதிமுகவின் வேட்ப்பாளராக வளம் வருகிறார் 

அம்மையாரால் ஓரம்க்கட்டபட்ட இவர்கள், எங்களை கட்சியை விட்டு ஓரம் கட்டினாலோ அல்லது நீக்கினாலோ நீங்கள் நிரந்தரமாக சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பீர்கள் ..... உங்களுடைய அனைத்து ஊழல்களும் வெளி கொண்டு வருவோம் என்று மிரட்டவே, அம்மையாரால் ஒன்றும் செய்ய இயலாமல், அவர்களுடன் இணக்கமாக சென்று உள்ளார்....
அவர்களுக்கு மட்டும் சீட்டு வழங்கியதல்லாமல் அவர்கள் கை நீட்டிய அனைத்து வேட்பாளர்களுக்கும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது .....வேட்பாளர் பட்டியலும் 4 , 5 முறை மாற்றம் செய்யப்பட்டதும் மேற்கூறிய காரணங்களுக்காகவே...
அம்மையாரால்வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை பார்த்தலே நன்கு விளங்கும் இதில் முக்கியமான விஷயம், தேர்தலுக்கு பின் OPS தரப்பினர் தனியாக செல்ல இருப்பதாக அதிமுக உபி க்கள் மத்தியில் சல சலசலப்பு

ad

ad