8 மே, 2016

58 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வழங்க இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு


ஐரோப்பாவின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு 58
நிபந்தனைகளுக்கு உடன்பட்டுள்ளது.
மனித உரிமை விடயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்ளுர் வர்த்தக விடயங்கள் இதில் அடங்குகின்றன.
58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதும் ஒன்றாகும்.
இதனை தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, புதிய மனித உரிமைகள் திட்டத்தை அமுல் செய்தல், தமிழ் புலம்பெயர்வாளர்களின் விடயங்கள், வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கல் என்பனவும் இதில் அடங்குகின்றன.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போதே ஜிஎஸ்பி பிளஸ் விண்ணப்பம் பற்றி சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை குறித்த நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் கண்காணிப்புக்களில் ஈடுபடும் என்று ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.