8 மே, 2016

சுன்னாகத்தில் புகைவண்டி மோதியதில் யுவதி பலி!

காங்கேசன்துறையிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகையிரதம் மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று இரவு காங்கேசன்துறையில் இருந்து யாழ். நோக்கி வந்த புகைவண்டி மோதியதில் யுவதியொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெமின்சினா (வயது 18) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் இது விபத்தா அல்லது, தற்கொலையா என்பது தொடர்பில் தாம் விசாரணை நடத்தி வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.