புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2016

அல்பேர்ட்டாவை ஆக்கிரமித்துள்ள பாரிய தீ மாதக்கணக்கில் தொடரலாம்.அதிகாரிகள் அச்சம்.

கனடா-அல்பேர்ட்டா, வோர்ட் மக்முரேயை சூழ்ந்திருக்கும் பாரி தீயானது மாதக்கணக்கில் தொடரலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

இத்தீயானது அல்பேர்ட்டாவின் வடபகுதி காடுகளின் 2,000 சதுர கிலோ மீற்றர்களை விழுங்கிவிட்டது. குறிப்பிடத்தக்க அளவிலான குறைந்தது 100மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்யாவிடில் தீயணைப்பு பிரிவினர் காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க மாதக்கணக்கில் போராட வேண்டிய நிலைமை ஏற்படுமென தீயணைப்பு பிரிவு அதிகாரிக்ள் தெரிவித்துள்ளனர்.
பாரிய இத்தீயானது அசாதாரணமானதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 80,000 குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இவர்கள் மீண்டும் எப்போது தங்கள் வீடுகளிற்கு திரும்புவார்கள் என்பது கேள்விகுறியாக உள்ளது.
ஆனாலும் அல்பேர்ட்டா அரசாங்கம் தீயை அணைக்கும் முயற்சியில் அழுத்தங்களிற்கு உள்ளாகியிருக்கும்  இவ்வேளையில் வெளியேறியவர்களிற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
சனிக்கிழமை காற்று தீயை தட்டிவிட்டதால் அதன் அளவு இரட்டிப்பு மடங்காகியது.
கால நிலையை பொறுத்து தீயின்தாக்கம் ஞாயிற்றுகிழமை சஸ்கற்சுவான் எல்லையை அண்மிக்கலாம் என கூறப்படுகின்றது.
இதே நேரம் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அல்பேர்ட்டா முதல்வர் றேச்சல் நொட்லி தெரிவித்தார்.
வெளியேறியவர்கள் மீண்டும் திரும்புவது உடனடியாக இடம்பெற மாட்டாது.
அப்பகுதியில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாது. அபாயகரமான பொருட்கள் அகற்றப்பட வேண்டும்.
நகரம் பாதுகாப்பானதாகவும் வசிக்கத்தக்கதாகவும் செய்வதற்கு மகத்தான வேலைகள் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Wildfire evacuees sort through clothes and other items at an evacuation center in Lac La Biche, Alberta, Saturday, May 7, 2016. More than 4,000 wildfire evacuees have come through the center this week. (AP Photo/Rachel La Corte)
A wildfire burns south of Fort McMurray, Alberta, near Highway 63 on Saturday, May 7, 2016. Canadian officials hoped to complete the mass evacuation of work camps north of Alberta's main oil sands city of Fort McMurray on Saturday, fearing the growing wildfire could double in size and reach a major oil sands mine and even the neighboring province of Saskatchewan. (Ryan Remiorz/The Canadian Press via AP) MANDATORY CREDIT
alb1mon2mon1mon


ad

ad