புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2016

மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார்

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும்,
ஜனநாயகயாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக
மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு இன்று மாலை முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது.
ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் இன்று யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்காக யாழ்.வந்திருந்த அமைச்சர் மனோகணேசன் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், முதலமைச்சரும் தாமும் மிக நெருங்கிய நண்பர்கள் எனவும், அந்தவகையில் சிநேகபூர்வமாகவும், சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும் பொருளாதார மையம் வவுனியாவில் அமைப்பது தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். அது தொடர்பாக முதலமைச்சருடன் பேசினோம். அது தொடர்பாக துறைசார் அமைச்சர் ஹரிசனுடன் முதலமைச்சர் விக்னேஷ்வரன் முன்னதாகவே பேசியிருக்கின்றார். எனவே அந்த விடயத்தில் வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுத்து வவுனியா நகருக்கு அண்மையில் பொருத்தமான காணியை தெரிந்து கொடுக்கும் என கூறியிருக்கின்றார்.

ad

ad