புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2016

முதலிடத்தில் நக்கீரன் : சர்வே ரிப்போர்ட்




’’சும்மா படிங்க பாஸ்’’ என்ற தமிழ் மாத இதழ் வரும் வைகாசி மாதத்தில் இருந்து வெளிவருகிறது.  இதை முன்னிட்டு அந்த மாத இதழ், தமிழகம் முழுவதும் ஒரு சர்வே எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. 

15-வது சட்டமன்ற தேர்தல்(2016) மற்றும் தமிழக ஊடகம் தொடர்பான பொதுமக்களின் கருத்து கணிப்பு குறித்து இதழின் ஆசிரியர் பொ.சக்திவேல் தலைமையில்  10 பேர் கொண்ட அணியினர் இந்த சர்வே முடிவுகளை அளித்துள்ளனர்.  

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 12,997 ( ஆண்கள் -7412, பெண்கள் - 5463, மூன்றாம் பாலினத்தவர்கள் - 122 )

சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை தொகுதிகள் வரை வெற்றிப்பெரும் என்ற சர்வேயில்,  திமுக கூட்டணி சுமார் 95 தொகுதிகளில் இருந்து 127 தொகுதிகள் வரை பெரும், என்றும், அதிமுக கூட்டணி சுமார் 79 தொகுதிகளில் இருந்து 110 தொகுதிகள் பெரும் என்றும், தேமுதிக-ம.ந.கூ.- தமாகா கூட்டணி சுமார் 7 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகள் வரை பெரும் என்றும், பாமக கூட்டணி 2 முதல் 10 பெரும் என்றும், பாஜக கூட்டணி 0 முதல் 2 தொகுதிகள் வரை பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் விரும்பி படிக்கும் வாரப்பத்திரிக்கை எது?என்று மக்கள் முன்வைத்த கேள்விக்கு, மக்கள் அளித்த பதில் பின்வருமாறு: சதவிகிதத்தில்.

1. நக்கீரன்             - 30%

2. ஆனந்த விகடன்    - 21%

3. குமுதம்              - 14%

4. குங்குமம்             -14%

5. குமுதம் ரிப்போட்டர்  - 6%

6. ஜூனியர் விகடன்    -4%

7. புதிய தலைமுறை   - 3%

8. டைம் பாஸ்           -2%

9. மற்றவை             -6%

ad

ad