புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2016

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கலைஞர் - மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.  இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று மாலை முதலமைச்சர் ஜெயலலிதா கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பழைய மந்திரி சபையின் ராஜினாமாவையும் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னரிடம் அளித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட கவர்னர் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தவிர 28 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். மந்திரிகள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் 16 பேர் ஏற்கனவே மந்திரிகளாக இருந்தவர்கள். 13 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கிறது. முதமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.

பதவி ஏற்புக்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள 3150 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் மூலம் நேரில் அழைப்பு கொடுக்கப்படுகிறது.

இது தவிர பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ், பீகார் முதல்– மந்திரிக்கு நிதிஷ்குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்–மந்திரிகள், இடதுசாரி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி ஈரானில் சுற்றுப் பயணம் செய்வதால் அவருக்குப் பதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி வெங்கையா நாயுடு ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதால் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

ad

ad