புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2016

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் நேற்றைய தினம் வட மாண முதலமைச்சர் தலமையிலான
குழுவினரால் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் தமிழ் மக்களிற்கான இனப்பிரச்சனைக்கான தீர்வு காணும் முயற்சியில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியில் உள்வாக்கப்படவேண்டும் என வட மாகாண சபையினால் ஓர் முன்மொழிவு தயாரிக்கப்பட்டு தீர்மாணமாகவும் நிறைவேற்றப்பட்டது
இவ்வாறு நிறைவேற்றப்பட்டதன் தீர்மானப் பிரதியே வட மாகாண முதலமைச்சர் , வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் , வட மாகாண பேரவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேர் இணைந்து குறித்த பிரேரணையின் பிரதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடம் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
இதனை கையளித்த முதலமைச்சர் வரலாற்றை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் பிரச்சணைக்கான தீர்வாக வட மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட இம் முன்மொழிவினை கூட்டைப்பின் தீர்வில் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எமது தமிழ் மக்களிற்கான தீர்வாக வடக்கும் கிழக்கும் இணைந்த ரீதியில் சமஸ்டி அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான தீர்வினை பெற  நாம்  தொடர்ந்தும் பாடுபடுவோம் இதற்காகவே நாம் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம் . என்றார்.

ad

ad