புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2016

ஐ.நா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் – அமெரிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக அமெரிக்க காங்கிரஸ் கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலானது நாளைமறுதினம்(செவ்வாய்கிழமை) அமெரிக்க காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் காரியவசம் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

ad

ad