புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2016

மைத்திரி – மஹிந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சமாதானப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்துவதில்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானங்களை மீறும் வகையில் அண்மைய நாட்களில் இவர்கள் செயற்பட்டுள்ளனர்.
கட்சிக்குள் சமாதானமின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின், கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொள்ள வேண்டும்
மேலும் கட்சி உத்தியோகபூர்வமாக எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.
எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரின் செயற்பாடுகள் கட்சியின் பயணத்திற்கும், நன்மதிப்பிற்கும் பெரும் தடையாக அமைந்துள்ளது.
மே தினக் கூட்டத்திலும் பங்கேற்காத இவர்கள் கட்சியின் ஒழுக்க விதிகளை பல தடவைகள் மீறிச் செயற்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்

ad

ad