புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2016

காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் முரண்பாடு!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போதல்கள் தொடாபில் அரசாங்கத்தின் புள்ளி விபரத் தகவல்களுக்கும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுகின்றது.


காணாமல் போனவர்கள் தொடர்பில் 19000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.


1983ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆணைக்குழு நாடு முழுவதிலும் அமர்வுகளை நடத்தி விசாரணை மேற்கொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.


எவ்வாறெனினும் 1994ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் தொடர்பில் 65000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


காணாமல் போனவர்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் முறைப்பாட்டு எண்ணிக்கைக்கும் தமது ஆணைக்குழுவின் முறைப்பாட்டு எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு குறித்து கருத்து வெளியிட முடியாது என பரணகம தெரிவித்துள்ளார்.


வேறும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து தமக்கு கருத்து வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் காணாமல் போயுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


காணாமல் போனவர்கள் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் அடுத்த மாதம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்

ad

ad