புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2016

ரூபாய் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு


திருப்பூர் அருகே ரூபாய் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மே 13ம் தேதி திருப்பூர் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், ஆந்திராவில் உள்ள கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பணம் கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி அனுமதி பெறப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை பலமாக எழுந்தது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

ad

ad