புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

யாழ். பல்கலைக்கழக சம்பவம்: விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றைய மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு முன்னால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு பொலிஸாரை அகற்றிக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மோதல்களின் போது சிங்கள மாணவர்களினால் அடித்து நொறுக்கப்பட்ட விஞ்ஞானபீட கட்டடத்தை கோப்பாய் பொலிஸார் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ad

ad