புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2016

என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம் : சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

 சேலத்தில் மக்கள் திமுகவை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்.

இவ்விழாவில் மு.க.ஸ்டாலின்,  ‘’சேலம் உருக்காலை, பெரியார் பல்கலையை அமைத்தது திமுக ஆட்சிதான்.  13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்த தலைவர் கலைஞர். சாதனைத் தலைவர் தலைமையிலான திமுகவில் இணைந்துள்ள மதேதிமுகவினரை வரவேற்கிறேன்.   ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களூக் காகப் பாடுபடும் இயக்கம் திமுக. திமுக ஆட்சிக்கு வரவில்லையே என நம்மைவிட வேதனைப்படுபவர்கள் பொதுமக்கள்தான்.  

என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டமன்றத்தில் பேசாமால் வெளியே வரமாட்டோம்.  தற்போது தமிழக சட்டமன்றத்தில் ஒரே எதிர்க்கட்சியாக திமுக இடம் பெற்றுள்ளது.  

நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும்.  திமுக வை தொடங்கிய அண்ணா விட்டுச்சென்ற பணிகளை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். 67 ஆண்டுகாலமாக திமுக தமிழர்களுக்காக தனது கடமையை நிறைவேற்றி வருகிறது. 

 தமிழர்களூக்கு பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அவர்களூக்காக குரல் எழுப்பும் இயக்கம் திமுக.  தமிழர்களூக்கு சமூக நீதி கிடைத்திட, தமிழகத்தில் தொழிலை பெருக்கிட நடவடிக்கை எடுத்தது திமுக.    திராவிட இயக்கங்களின் தேவை இன்றைக்கு மக்களூக்கு தேவை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள்’’ என்று பேசினார்.

ad

ad