புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

வாக்குறுதி காற்றில் பறந்தது கேப்பாப்புலவு மக்கள் உண்ணாவிரதம்

மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்என அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததை அடுத்துமீண்டும் 
உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க முல்லைத்தீவு – கேப்பாப்புலவுமாதிரி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று மாலை 3 மணிக்கு கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் நடைபெற்றகலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி கேப்பாப்புலவு பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் காலை 9மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக  கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்தனர்.
இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாம்களில்தடுத்துவைக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவைச் சேர்ந்த 230 குடும்பங்கள்,  2010 ஆம் ஆண்டு கேப்பாப்புலவுமாதிரி கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
இதனையடுத்து ஆறு வருடங்கள் கடந்தும் தமது சொந்தக் கிராமத்தை விடுவிக்காது மாதிரிக்கிராமத்திலேயே தங்கவைக்கப்பட்ட கேப்பாப்புலவு மக்கள்கடந்த ஏப்ரல் மாதம் தமது காணிகளைவிடுவிக்குமாறுகோரி தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்திரந்தனர்.
 
அப்போது போராட்டத்தை கைவிடுமாறும் கோரிய அரசாங்கம்மூன்றுமாதங்களில் காணிவிடுவிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியிருந்ததுஎனினும் குறிப்பிட்டமூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமக்கான தீர்வு வழங்கப்படாது குறித்து மக்கள் கவலைதெரிவித்தனர்.

கடந்தமுறை போராட்டத்தில் ஈடுபட்டபோது வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர்தொடர்பில் தமக்கு  நம்பிக்கை இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது காணிகளை இராணுவத்தினர் ஆக்கரிமித்துள்ளதால் அடிப்படை வசதிகள் இன்றி தமது கிராமத்திற்குஅருகிலேயே அகதி வாழ்க்கை வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும்மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதனாலேயே , எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்ததாகவும் கேப்பாப்புலவு மக்கள் கூறுகின்றனர்.  
ஜனாதிபதி மைத்திரிபாக சிறிசேனமீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர்இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிகள் குறித்த திகதிகளில்விடுவிக்கப்படும் என கடிதம் வழங்கும் பட்சத்தில் தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்கைவிடப்படும் எனவும்கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad