புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2016

ம.தி.மு.க. தொடங்கும் மதிமுகம் டெலிவி‌ஷன் வைகோ 14 -ந்தேதி தொடங்குகிறார்

மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 14-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கென ஒரு டெலிவி‌ஷன் செய்தி சேனல்களை நடத்தி வருகின்றன.
அ.தி.மு.க.- ஜெயா டி.வி., தி.மு.க.-கலைஞர் டி.வி., பா.ம.க.-மக்கள் டி.வி., தே.மு.தி.க.-கேப்டன் டி.வி., காங்கிரஸ்-வசந்த் டி.வி., விடுதலை சிறுத்தை– வெளிச்சம் டி.வி., பா.ஜனதா-தாமரை டி.வி. போன்ற டி.வி. சேனல்கள் செயல்பட்டு வருகின்றன.
ம.தி.மு.க. சார்பில் டி.வி தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் அக்கட்சிக்கு புதிய டி.வி. தொடங்கப்படுகிறது.
மதிமுகம் என்று பெயர் சூட்டப்பட்ட புதிய தொலைக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 14-ந் தேதி தொடங்கி வைக்கிறார். புதிய தொலைக் காட்சி குறித்து வைகோ கூறியதாவது:–
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை முன்நிறுத்தும் வகையில் ‘மதிமுகம்’ என இத்தொலைக்காட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் ஆதரவாளர்கள், சில நிர்வாகிகள் இணைந்து இதனை தொடங்கியுள்ளனர்.
இது கட்சி தொலைக்காட்சியும் இல்லை. கட்சி சார்பும் இல்லை. சாதாரணமாக தொலைக்காட்சிகளில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் இதில் இடம் பெறும். நடுநிலையோடு செய்திகள் வெளிவரும்.
ம.தி.மு.க. தொடர்புடைய என்னுடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ம.தி.மு.க. மாநாடுகள், பொதுக்கூட்டம், விழாக்கள் போன்றவை முழுமையாக வெளியிடப்படும். எனது அறிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பப்படும்.
மற்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் எனது செய்திகள் இருட்டடிப்பு செய்து குறைத்து வெளியிடப்படுகின்றன. மதிமுகம் தொலைக்காட்சியில் எனது செய்திகள் முழுமையாக வெளிவரும்.
மதிமுகம் தொலைக்காட்சியில் மக்களை கவரக்கூடிய அனைத்துத் தரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இன்றைய சூழலில் தொலைக்காட்சி நடத்துவது கடினம். அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் பல இருக்கின்றன. இந்த நிலையில் புதிய டி.வி.யை தொடங்கி நடத்துவது கடினம் என்றாலும் ஒரு முயற்சி செய்கிறோம். இதன் தொடக்க விழா ஒரு சிறிய நிகழ்ச்சியாக 14-ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad