புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2016

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் - துருக்கி அதிபர்

ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று துருக்கி
அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துருக்கி நாட்டில், ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர், விடுமுறையை கழிப்பதற்காக நேற்று,  துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலாத் தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.
தலைநகர் அங்காராவில், ஜனாதிபதி எர்டோகன் இல்லாத சூழ்நிலையில் துருக்கியில் நேற்று மாலை திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையங்களை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து துருக்கி முழுவதும் ராணுவ சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக ராணுவம் அறிவித்தது.

இதனால், அதிபர் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவத்தின் இந்த தாக்குதலில் 17 போலீசார் உள்பட 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி எர்டோகன் இன்று அதிகாலை விமானம் மூலம் இஸ்தான்புல் திரும்பினார். அவர் ஸ்கைப், பேஸ்டைம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். துருக்கி பிரதமர் பினாலியும் ஸ்கைப் மூலம் மக்களை தொடர்பு கொண்டு பேசினார்.

ஜனாதிபதி எர்டோகன் மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், ''நாங்கள் ஆட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறோம். மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். ராணுவத்தில் ஒரு பிரிவினர் மட்டும் இந்த துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அவர்களது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

ராணுவ ஆட்சிக்கு சதி செய்ததாக 754 ராணுவ வீரர்களை அரசு கைது செய்துள்ளது. முன்னாள் ராணுவத் தளபதி ஹூலுசி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ad

ad