புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2016

16.07.2016 அன்றுபுங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நட்பு ரீதியிலான மெய்வல்லுனர் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகள்

Pramrajeenth Sivasamy அன்புடையீர்!
புஎதிர்வரும் 16.07.2016 அன்றுBannister Sports ,Uxbridge Rd, Harrow, Middlesex HA3 6SW என்ற மைதானத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளது


என்பதனை மிகவும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம் . இந்நிகழ்வுக்கு அனைத்து புங்குடுதீவு உறவுகளையும் சமூகம் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் .

போட்டி நிகழ்வுகள் பின்வருமாறு,

சிறுவர் /சிறுமிகள் 50 மீட்டர் ஓட்டம் (5 வயதிற்கு கீழ் பட்டோர்).

சிறுவர் /சிறுமிகள் 50 மீட்டர் ஓட்டம் (8 வயதிற்கு கீழ் பட்டோர்).

இளைஞர்களுக்கான /யுவதிகளுக்கான 200 மீட்டர் ஓட்டம்.

*கயிறு இழுத்தல் போட்டி

>திருமணமான ஆண்கள் எதிர் திருமணமாகாத இளைஞர்கள் .
> திருமணமான பெண்கள் எதிர் திருமணமாகாத பெண்கள் .

சிறுவர் /சிறுமிகளுக்கான முட்டி உடைத்தல் போட்டி,

> மற்றும் பல்வேறு புங்குடுதீவுக்கு கழகங்கள் பங்கு பெறும் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வும் இடம்பெறும் என்பதனையும்,

இம்முறை விசேட அம்சமாக வர்த்தக கண்காட்ச்சி, தரமான ஒடியல் கூழ், கொத்து ரொட்டி உள்ளடங்கலாக உள்ளூர் உணவு வகைகள், குழந்தைகள் விளையாடுவதற்கு என்பன உங்களை மகிழ் விப்பதற்காக அமைக்கப்படவுள்ளது என்பதனையும் பிரவேசம் ....................அது இலவசம் ......என்பதனையும் அன்போடு அறியத்தருகின்றோம்.

அன்பான எம்முறவுகளே நீங்கள் அறிந்த இச்செய்தியினை உங்கள் புங்குடுதீவு நண்பர்களுக்கும் தெரிய படுத்தி அவர்களையும் அழைத்து வாருங்கள் .

உங்கள் ஆரோக்கியமே உங்களின் உண்மையான சந்தோசம். நிகழ்வுகள் யாவும் குறித்த நேரத்தில் தொடங்கும் என்பதனால் காலதாமதமின்றி நிகழ்வுக்கு வாருங்கள் . உங்கள் குழந்தைகள் பங்கு பெற விரும்பினால் என்ற எமது இணையத்தளத்திலோ, கீழே குறிக்கப்படும் நலன்புரிச்சங்க உறுப்பினர்களின் தோலை பேசி ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

புங்குடுதீவு நலன் புரிச் சங்கம்,
பிரித்தானியா .
Rajeenth 07931733751
Yogi 07929349302
venu 07932789544
Thiru 07737133878.

ad

ad