புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

ராம்குமார் ஜாமின் மனுவில் ஆஜராவதில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் அறிவிப்பு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் ஜாமின் கோரி ராம்குமார் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ராம்குமார் அப்பாவி. சுவாதியை அவர் கொலை செய்யவில்லை. உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் ராம்குமார் மீது குற்றம் சாட்டுவதாகவும், ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்தவர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். 

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகன், வழக்கில் ஆஜராக கிருஷ்ணமூர்த்தி ராம்குமாரின் ஒப்புதலை பெறவில்லை என்றும், ராம்குமார் சார்பில் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறினார். 

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார். தேவையற்ற சர்ச்சைகள் எழுக்கூடாது என்பதற்காக வழக்கில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். 

ராம்குமார் ஒப்புதல் பெறாமல் வழக்கு தொடர்ந்ததால் எழுந்த சர்ச்சை காரணமாக கிருஷ்ணமூர்த்தி விலகியதாக கூறப்படுகிறது. மேலும், சிறையில் உள்ள ராம்குமாரை இதுவரை எந்த வழக்கறிஞரும் நேரில் சந்தித்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad