புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

காணாமற்போனோர் பணியகம் அமைப்பு ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசணைக்கு அமைய  இலங்கை அரசாங்கத்தால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர் பணியகத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கூட்டு எதிர்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர்  கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெளிவுபடுத்திய அவர்
 
 கூட்டு எதிர்கட்சியினர் – “காணாமல்போனோருக்கான பணியகத்திற்கு நேரடியாக பெருந்தொகையான நிதியை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலேயே உத்தேச சட்டமூலம் அமைந்துள்ளது. இவை நன்கொடையல்ல. ஏதோவொரு பலனை எதிர்பார்த்தே இந்த நிதிகள் வழங்கப்படுகின்றன. அதமாத்திரமன்றி அந்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு தாம் சோதனை செய்ய விரும்பும் எந்தவொரு இடத்திற்கும் செல்வதற்கு அனுமதியும் இந்த சட்டமூலத்தினால் கிடைக்கின்றது.

இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் படைமுகாம்கள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய இடங்களை இவர்கள் சோதனை என்ற பெயரில் பார்வையிட முற்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும். அதுமாத்திரமன்றி இந்த பணியகத்தை மேற்பார்வை செய்வதற்காக விசேட நிபுணர் குழுவொன்றையும் அமைக்க தீர்மானித்துள்ளனர். காணாமல்போனோரின் உறவினர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது. அப்படியாயின் இவர்கள் அனைவரும் முகாம்களையும், பாதுகாப்பிற்குரிய முக்கிய இடங்களையும் சோதனையிட முற்பட்டால் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையான்மை கேள்விக்குறியாகிவிடும். அதனாலேயே நாம் இதனை எதிர்க்கின்றோம்.

இந்த பணியகத்தின் ஊடாக நாட்டையும், நாட்டு மக்களையும் கூறுபோட அரசாங்கம் முனைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  பீரிஸ் குற்றம் சாட்டினார்.

ad

ad