புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் குண்டுத்தாக்குதல்

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர்
உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து 100கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிஷோர்காங்க் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை ஏழு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த பகுதியில் நடத்தப்பட்டிருந்ததுடன் 22 பேர் இதன்போது கொல்லப்பட்டிருந்தனர். சுமார் 2 இலட்சம் பேர் குழுமியிருந்து தொழுகைகளில் ஈடுபட்டிருந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கி மோதல் வலுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad