புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.


அமெரிக்க மண்ணில் கிரிக்கெட்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்கள் குவிக்க, அதை நெருங்கிய இந்திய அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட போது டோனி கேட்ச் ஆனதால், வெற்றிக்கனி நழுவிப் போனது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக சேர்க்கப்பட்ட 489 ரன்களே (245 மற்றும் 244 ரன்) சர்வதேச உள்பட அனைத்து விதமான 20 ஓவர் கிரிக்கெட்டிலும் எடுக்கப்பட்ட அதிகபட்சமாக அமைந்தது.

இந்த நிலையில் இதே மைதானத்தில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று அரங்கேறியது. ஒளிபரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை வாரி வழங்கிய ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இடம் பிடித்தார். இந்த ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்

மறுபடியும் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்த முறை ரன்மழை பொழிய முடியவில்லை. இந்திய பவுலர்கள் அவ்வப்போது வைத்த ‘செக்’கால் அவர்களின் ரன்வேகம் சராசரி வேகத்திலேயே நகர்ந்தது. முதல் ஆட்டத்தில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் எவின் லிவிஸ் இதில் 7 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் அமித் மிஸ்ராவிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் 43 ரன்னிலும் (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), லென்டில் சிமோன்ஸ் 19 ரன்னிலும், சாமுவேல்ஸ் 5 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர்.
இப்படியே அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் அவர்களால் 150 ரன்களை கூட கடக்க முடியவில்லை. 19.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. சார்லசை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களில் யாரும் 20 ரன்களை தாண்டவில்லை. பொல்லார்ட், ரஸ்செல் தலா 13 ரன்களும், வெய்ன் பிராவோ 3 ரன்களும், கேப்டன் கார்லஸ் பிராத்வெய்ட் 18 ரன்களும் எடுத்து தடுமாறினர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், அஸ்வின், பும்ரா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மழையால் ரத்து

பின்னர் 144 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்து ஓய்ந்தது. ஆனால் ஈரப்பதத்தை காய வைக்க அந்த மைதானத்தில் போதிய வசதிகள் இல்லை.

இதையடுத்து இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

ad

ad