புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016


"துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வாருங்கள்' என்று சவால் விட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. எவ்வளவு கண்ணிய மான
வார்த்தைகள். தன் கட்சி யைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. இப்படிச் சொல்லியிருந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் உதிர்த் துள்ள வார்த்தைகள் இவை. இதில் மரபு மீறல் என்பதை ஒதுக்கி விடுவோம். வெளிப் பட்டுள்ள உண்மையை மட்டும் கவனிப்போம். அதாவது ஜெயலலிதா முதல்வராகவும் பினாமி சபாநாயகராகவும் உள்ள சட்டசபையில் நுழைவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிச்சயம் துணிச்சல் தேவை.

இதுபோன்றோ அல்லது வேறு எந்த வகையிலாவதோ அநாகரிகச் சொற்களைக் கருணா நிதியும் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசவில்லையா என்று யாராவது கேட்டால் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது. தடித்த வார்த்தைகளைப் பல அரசியல் வாதிகள் பேசுகிறார்கள். ஆனால் 79 சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு   அந்தக் கட்சியின் தலைவரை, முதியவரை, முன்னாள் முதல்வரை சந்தைக் கடையில் சண்டியர் கேட்பது போல் "ஒத்தைக்கு ஒத்தை வர்றியா' என்ற படியாகக் கேட்பது, தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமா என்பதை அம்மையார் யோசித் துப் பார்க்கட்டுமே. மனசாட்சி என்ற ஒன்று அவருக்கு இருந் தால் அது அவரை உறுத்தும்.
சட்டமன்றத்தில் தன்னைச் சுற்றிக் கைதட்டுபவர்களும் புகழ்ந்து பேசுபவர்களும் மட்டுமே இருக்க வேண்டும் என்றால்... ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் வென்றிருக்க வேண்டும்.
ஒரே ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் இருந்தாலும் கூட அவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவை நாகரிகம். அதுபற்றி ஜெயலலிதாவிடம் பேசிப் பயனில்லை. சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் இவரைப் பற்றி புகார் சொன்னபோது அது அநாகரிகம் என்று விமர்சித்த நடுநிலையாளர்கள், ஜெயலலிதா "துணிச்சல் இருந்தால் சட்டசபைக்கு வாருங்கள்' என்று சவால்விட்டது, அதேபோன்ற அநாகரிகம்தான் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
இப்படி சவால்விடுவது, கூண்டோடு வெளியேற்றுவது ஆகியவற்றைச் செய்வதைவிட பெரும்பான்மை உறுப்பினர்கள் தான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும். மற்ற கட்சியினர் அடுத்த தேர்தல் வரை சட்ட சபைக்கே வரவேண்டாம் என்று உத்தரவு போடலாமே. அதையும் கூட ஜெயலலிதா ஒருநாள் செய்வார். ஏனென்றால் அவர் தன்னை எப்போதும் ஒரு மகா ராணியாக நினைத்துக்கொள் கிறாரே ஒழிய, ஜனநாயக நாட் டின் மக்கள் பிரதிநிதி என்பதை ஒரு கணமேனும் உணர்ந்ததில்லை. அதனால்தான் தன் கட்சிக்காரர் களைப் போலவே எதிர்க்கட்சி யினரும் அவையில் அடிமை களாகவே நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.
காளைமாடு பால் கறக்கும் காலத்தில் ஜெயலலிதா ஜனநாயக வாதியாவார் என்று எதிர்பார்க்கலாம்.
அப்போது "அம்மா சபை' மறுபடியும் அம் மாசபை ஆகலாம்

ad

ad