புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; தில்ஷன் விடைபெற்றார்

ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில்
முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 226 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தினேஷ் சன்டிமால் சதம் (102 ரன்) அடித்தார். தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய தில்ஷன் 42 ரன்களில் (65 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதிகபட்சமாக ஜார்ஜ் பெய்லி 70 ரன்களும், மேத்யூ வேட் 42 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்துடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற 39 வயதான தில்ஷனுக்கு வெற்றியை சமர்ப்பிக்க இலங்கை அணியினர் முயற்சித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டதாக இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறினார்.

இதன் மூலம் 5 போட்டி கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

ad

ad