புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவற்றுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்காததை,இட்டு கவலை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு விடையங்களுக்காக போராடும் மக்களும் அரசியல் கட்சிகளும் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவரும் போதைப் பொருள் மற்றும் மது பாவனைக்கு எதிராக போராட வருவதில்லை என்றும் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மது மற்றும் போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பும் செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில்   ஆம்பித்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி யாழ் மாவட்டமே இலங்கையில் மதுபாவணையில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்ததற்கு விசேட காரணம் ஒன்று இருக்கின்றது.

குறிப்பாக இங்கு முன்னர் இங்கு வந்ததை விட முற்றிலும் மாறான ஒரு விடையத்திற்காகவே நான் இங்கு வந்திருக்கின்றேன்.

எமது சமூகம் அபிவிருத்தி குறித்தே கதைக்கின்றது. இந்த அபிவிருத்தியின் போது தமக்குக் கிடைக்காத விடையங்களுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

தமக்கான குறைகளை நிவர்த்திக்குமாறு கேட்டே இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் நான் இன்று முற்றிலும் மாறுபட்ட விடையமொன்று குறித்து கதைப்பதற்கே இங்கு வந்துள்ளேன்.

போராட்டங்களில் ஈடுபடும் தரப்பினர் கவனம் செலுத்தாத எமது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேறு பல விடையங்களும் எம் மத்தியில் காணப்படுகின்றன.

மதுபானசாலைகளை மூடுமாறு எவரும் போராட்டம் நடத்துவதில்ல. போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கி எவரும் போராட்டம் நடத்துவதில்லை.

எமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் மது பாவனை காரணமாக நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் தரப்பினர் இவற்றுக்காக ஏன் போராட்டம் நடத்துவதில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.

இந்தப் பிரச்சனை எமது நாட்டுக்கு மாத்திரம் உரியதல்ல. உலகம் முழுவதும் பெரும் பிரச்ச னையாக உருவெடுத்துள்ளது.

ஆனால மக்கள் மத்தியில் இருந்தோ அல்லது அரசியல்வாதிகள் மத்தியிலிருந்தோ போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்கள் இதுவரை வெடிக்கவில்லை.

போதைப்பொருளுக்கு எதிரான அமைப்புகள் மாத்திரமே இந்த போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றன.

இந்த இடத்தில் மிகவும் கவலைகுரிய ஒரு தகவலை தெரிவித்தாக வேண்டும். இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருக்கின்றன.

இவற்றில் மதுபானம் விற்று அதிக வருமானத்தை திறைசேரிக்கு வழங்கும் மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதல் இடத்தில் உள்ளது.

யாழ் நகரில்மாத்திரம் சுமார் 70 மதுபான விற்பனை  நிலையங்கள் இருக்கின்றன.

வட மாகாணத்தில் அதுவும் யாழ் மாவட்டம் முகம்கொடுக்கம் பிரதான சமூகப் பிரச்சனை யாகவும் இன்று போதைப்பொருள் பாவனை மாறியுள்ளது.

இதனை எவரும் மறந்துவிடக் கூடாது. இதனால் இந்த நிலைமையை தடுக்க மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் அரச அலுவலகங்களும் மேற்கொண்டுவரும் நடவடி க்கை களுக்கு மக்கள் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி

ad

ad