புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தி சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடித

Ananthasangari
இன்றைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி, ஏற்கக்கூடிய ஒரு நியாயமான
தீர்வை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தயக்கம் காட்டுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தி, இரா சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கையளிக்குமாறும் சங்கரி கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எத்தகைய பரிதாபமான நிலையில் நமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை உணராமல் தாங்களும் ஏனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் நிலைமையை பாராதூரமாக கருதாமல் காலம் கடத்துவது பரிதாபத்துக்குரிய விடயமாகும்.
விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்களே தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்று மக்களை நம்பவைத்துவிட்டு தற்போது தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அம்போவென கைவிட்டுவிட்டீர்கள். அவர்கள்தான் உங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப உதவியவர்கள்.
தற்போது நன்றிகெட்ட தனமாகவும், நியாயமற்ற முறையிலும் சிறுவர்களாக கணிக்கப்பட வேண்டியவர்களை யுத்த குற்றங்களுக்காக விசாரிக்குமாறு வற்புறுத்தி கேட்டுள்ளீர்கள். விடுதலைப் புலி போராளிகள் போராட்டத்தில் கருவிகளாகவே உபயோகிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பாவிகளாக தாமாக முன்வந்தும், வற்புறுத்தலின் பேரிலும் அந்த இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் என்றும் அவர்களை பாரம்பரிய இராணுவமாக கணித்து விசாரணை மேற்கொள்ளவே முடியாது என்று த.வி.கூ ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வந்துள்ளதுடன் அதுவே எமது நிலைப்பாடும் ஆகும்.
தங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தவர்கள் இன்று நம்பிக்கையை இழந்து நிற்கின்றார்கள். இன்றைய கட்டத்தில் தாங்கள் மேற்கொள்ளக்கூடிய மிகக் கௌரவமான விடயம் யாதெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசு கட்சி அங்கத்தவர்கள் இராஜினாமா செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் எதிலும் அவர்களை கைவிடாத தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் மீள கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மக்களுக்கான பணியை செய்ய விடாது தடுத்து வைத்திருந்தவர்கள் நீங்களே. 1983ம் ஆண்டு பாராளுமன்றத்திலிருந்து த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களும் நானும் உட்பட 18 பேர் தங்களின் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்து பாராளுமன்றத்தின் கால எல்லையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆறு ஆண்டுகள் நீடித்த போது நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றிய பெருமையை தேடிக்கொண்டவர்கள்.
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி நியாயமான ஏற்கக்கூடிய ஒரு தீர்வை அடைவதற்கு நீங்கள் ஏன் தயக்கமோ அல்லது தவிர்க்கவோ எத்தணிக்கின்றீர்கள் என்ற காரணத்தை என்னால் புரியமுடியவில்லை. இன்றைய சூழ்நிலையில் இதுவொரு அவசரத் தேவையாகும். தயவுசெய்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ தவிர்த்துக் கொள்ளவோ முயற்சிக்காதீர்கள்.

ad

ad