புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2016

மூன்று தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கு முயற்சி... யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவன் பதிவு செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் இவ்வாறு தமிழ் மாணவர்களை கைது செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள மாணவர் முதலில் 3 தமிழ் மாணவர்கள் தன்னை தாக்கியதாக கூறி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

இதன்படி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனை கைது செய்வதற்கு பொலிஸார் முயட்சிகள் மேற்கொண்ட வேளை அவர் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிiலில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் தமிழ் மாணவர்களை தாக்கிய சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கோப்பாய் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

இம் முறைப்பாட்டில் 4 சிங்கள மாணவர்களுடைய பெயர் விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் 4 பேருடைய பெயர் குறிப்பிட்டு முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதை அடுத்து, சிங்கள மாணவர் தான் ஏற்கனவே செய்த முறைப்பாட்டில் மேலும் ஒரு தமிழ் மாணவனுடைய பெயரையும் சேர்த்து மீள் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

தமிழ் மாணவர் சிங்கள மாணவர்களுக்கு எதிராக செய்த முறைப்பாடு அப்படியே கிடப்பில் கிடக்கையில், சிங்கள மாணவர் தமிழ் மாணவருக்கு எதிராக செய்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி யாழ்.பல்ககை;கழகத்திற்கு சென்ற பொலிஸார் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் மாணவர்களுடைய விபரங்களை பெற்றுக் சென்றுள்ளனர்.

ad

ad