புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2016

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது ஏன்? சட்டத்தரணி விளக்கம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விசேட ஆயுத ங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்டறிவதற்காகவே அவரது உடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக, லசந்த தரப்பு சட்டத்தரணியான அதுல ரணகல குறிப்பிட்டுள்ளார்.

மீள் பிரேத பரிசோதனைக்காக இன்று காலை லசந்தவின் உடலம் தோண்டியெடுக்கப்பட்டபோது, பொரளை மயானத்தில் பிரசன்ன மாகியிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

லசந்தவின் பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட சட்டத்தரணி அதுல, இதன் உண்மைத்தன்மை யை கண்டறியும் நோக்கிலேயே சடலத்தை மீள் பிரேத பரிசோதனை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிட்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லசந்தவின் உடலம் மயானத்தில் வைத்தே பரிசோதனை செய்யப்பட்டதோடு, குடும்ப உறவின ர்கள் மட்டுமே குறித்த இடத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad