புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2016

யாழ்.போதனா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு காணிவழங்க கோரிக்கை

யாழ். போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கம்’ ஆக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், காணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழு தலைவரும், வடமாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சுகாதாரம் குறித்து கலந்துரையாடிய போது, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியசாலையில் மேற்கொள்ள ப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

அதன்போது, விபத்துப் பிரிவின் கட்டட தொகுதியினை அபிவிருத்தி செய்தவற்கு 590 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 மாடிகள் கட்டக்கூடியதாக இருக்கின்றது. மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அத்துடன், புதிய மகப்பேற்று விடுதி அமைப்பதற்கு 1900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன், யாழ்.போதனா வைத்தியசாலையினை ‘வைத்தியசாலை சதுக்கமாக’ மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வைத்தியசாலைக்கு மேற்கு பகுதியில் உள்ள காணிப்பகுதியை மாகாண அமைச்சு வழங்கினால் வைத்தியசாலை சதுக்கமாக மாற்ற முடியும். எனவே, அவ்வாறு மாற்றுவதனால், வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும்.

எனவே, காணியை வழங்கி அதற்கான அனுமதியை தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதற்குப் பதிலளித்த இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் கிடைத்துள்ளதாகவும், ஆராய்ந்ததன் பின்னர் பதிலளிப்பதாகவும் கூறினார்.

ad

ad