புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

ஜெ.வுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், மணம் உடைந்து போனதாக கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் மோகன்குமார் கடந்த 13ம் தேதி தனது உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் கும்பகோணம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு நாட்களாக தீக்காயத்தோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர் 19 ம் தேதி இரவு 7.45 மணிக்கு உயிரிழந்தார். அவரது மனைவி மஞ்சுளாவும் மூன்று பிள்ளைகளும் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கின்றனர்.

கார்பண்டராக இருந்த மோகன்குமார் கும்பகோணம் அதிமுகவில் 23வது வார்டுக்கு வட்ட செயலாளராக இருந்தார்.  முன்னாள் எம்,எல்,ஏ ராம ராமநாதனின் தீவிர விசுவாசியாகவும் இருந்துள்ளார். ஜெயலலிதாவில் உடல் நிலைக்குறித்து தினமும் கட்சிக்காரர்களிடம் புலம்பியபடியே இருந்திருக்கிறார். அதோடு வேலைக்கு போகும் இடத்திலும் இதே பேச்சாகவே இருந்துள்ளார்.



மனைவி மஞ்சுளாவிடம் கேட்டோம், ’’ அம்மா ஆஸ்பத்திரிக்கு போனதிலிருந்தே அம்மாவுக்குன்னு யாரு இருக்கா நமக்காக தானே அவங்க இருக்காங்க, இப்ப எப்படி இருக்காங்களோ புரியலயேன்னு புலம்பினதோட ஜெய டிவிய தவிர வேர எந்த சேனலையுமே பார்க்கல, எங்கலையும் பார்க்கவிடல. அதோட வேலைக்கும் போகாம அம்மாவிற்காக எதையும் செய்வேன்னு பகிரங்கமாகவே சொன்னார், நாங்க யாரும் வீட்டுல இல்லாத நேரத்துல இப்படி செய்துக்கிட்டு நாங்க அனாதையா நிக்கிறோம்’’ என்றார்

ad

ad